Thursday, September 13, 2007

பிரியாவிடை

புயல் போல் நுழைந்தாய்
மேகம் போல் மறைந்தாய்
தூணைப் போல் நின்றாய்
எங்கள் வாழ்க்கையை மாற்றினாய்

பாடம் கற்பித்தாய்
தன்னம்பிக்கை வளர்த்தாய்
ஊக்கம் அளித்தாய்
நிம்மதி கொடுத்தாய்

நன்றே சிந்தித்தாய்
பகைவனுக்கும் தோள் கொடுத்தாய்
நண்பர்களுக்கு வாழ்வு அளித்தாய்
அனைவரையும் மகிழ்வித்தாய்

ஒளிந்திருக்கும் கலையை எழுப்பினாய்
‘நீயும் கலைஞன்’ என்று கூறினாய்
முன்னேற்றம் கண்டு போற்றினாய்
என் மகிழ்ச்சியில் கலந்து கொண்டாய்

வேலையில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தாய்
நான் தான் முதலாளி என்று நம்ப வைத்தாய்
என்னால் முடியும் என்று புரிய வைத்தாய்
என் செயலை கண்டு பாராட்டினாய்

விலகி செல்ல ஆசைப்பட்டாய்
உறவை துண்டித்தாய்
கண்ணீரில் குளிக்க வைத்தாய்
சோகத்தில் நனைய வைத்தாய்

இந்த ஊரின் மேல் உள்ள கோபமா?
உன் தொழில் மேல் உள்ள தாகமா?
உள்ளுக்குள் ஒரு போராட்டமா?
உன் முடிவில் வர இருப்பது மாற்றமா?

Wednesday, September 12, 2007

மனமே!

மேகங்கள் பல முறை தீண்டி விட்டு சென்ற போதும் நிலா கலங்குவதில்லை
தென்றல் மெதுவாக தழுவி விட்டு சென்ற போதும் மலர்கள் வேதனைப்படுவதில்லை
அலைகள் வேகத்துடன் வந்து விட்டு சென்ற போதும் கரை கோபம் கொள்வதில்லை

ஆனால் மனமே!
பல உள்ளங்கள் உன் அருகில் வந்து விட்டு சென்றால் நீ ஏனோ மறப்பதில்லை

நிலவுக்கு தெரியும் மேகம் கலைந்து பிரிந்து போய்விடும் என்று
மலருக்கு புரியும் தென்றல் தாமதம் கொள்ளாமல் சென்று விடும் என்று
கரைக்கு தெரியும் அலைகள் சில நொடியில் மறைந்து விடும் என்று

ஆனால் மனமே!
நீ அறியவில்லையே பல உள்ளங்கள் உன்னை மறந்து விடும் என்று?